கடைசிப் புகலி : தாஹர் பென் ஜெல்லோன்

(Le dernier immigré: Tahar Ben Jelloun) மூலம்: பிரெஞ்சு  தமிழில்: லக்ஷ்மி  கடைசி அராபியப் புகலி, ஒரு வட ஆபிரிக்கன், இன்று பிரெஞ்சு மண்ணை விட்டுப் புறப்பட்டான்.  பிரான்ஸ் நாட்டின் சார்பாக முதலமைச்சரும் உள்நாட்டமைச்சரும் மொகமட் லெமிகிரிக்கு நன்றியறிதலைத் தெரிவித்து, உத்தியோகபூர்வமாக வழியனுப்புவதற்கு, வருகை தந்திருந்தார்கள். மொகமட் உணர்ச்சிவசப்படவோ, ஆத்திரப்படவோ இல்லை. அவன் தனது சொந்த நாட்டுக்கு என்றைக்குமாக மீளத் திரும்பிச் செல்வது குறித்த  மகிழ்ச்சியில் இருந்தான். அவனுக்கு அன்பளிப்பாக கம்பளியிலான ஒரு ஒட்டகப் பொம்மையும்… Continue reading கடைசிப் புகலி : தாஹர் பென் ஜெல்லோன்

‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைகள் தொகுப்பு – நூல் மதிப்பீடு : லக்ஷ்மி

புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண் சிந்தனைகளின் பரிமாணம்  சிறுகதைகள் பற்றிய பார்வைக்கு முன்… பெரும்பாலான தமிழ் பேசும் பெண்களின் புலம்பெயர் நாடுகளிற்கான பிரவேசம் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்களைப்போல் சுயமானதல்ல. ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணிடம் (அது சகோதரனிடமோ, தந்தையிடமோ, கணவனிடமோ, காதலனிடமோ, திருமண பந்தத்தால் இணையப் போகிறவனிடமோ) தான் வந்து சேர்கிறாள். இப்படியான இடப்பெயர்வின்போது பெண்கள் பௌதீக ரீதியாக இடம் மாற்றப்படுகிறார்கள். உடனடியாக அவர்கள் மாற்றுச் சூழலுடன் தம்மை இணைத்துக் கொள்வதற்கான வாசல்கள் பெரும்பாலாக… Continue reading ‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைகள் தொகுப்பு – நூல் மதிப்பீடு : லக்ஷ்மி

அச்சக் கதறல் – க்ளோடியா சலஸார் ஹிமெனெஸ் (Claudia Salazar Jiménez)

மொழியாக்கம்: லக்ஷ்மிமூலம்: ஆங்கிலம் “நரகம் என்பது தனக்கென எந்த விதமான எல்லைகளையோ அன்றி ஒரு தனி இடத்தையோ  வகுத்துக்கொண்ட ஒன்றல்ல. நாங்கள் எங்கிருக்கிறோமோ அது நரகம். நரகம் எங்கிருக்கிறதோ அங்கு நாங்கள் என்றும் இருந்தாக வேண்டும்.”  கிறிஸ்தோபர் மர்லோ - டாக்டர் ஃபௌஸ்டஸ் (Christopher Marlowe - Doctor Faustus) காலைப்பொழுது.  கட்டிலில் படுத்திருக்கும் அவளுக்கு, தனது உடல் வழமையை விடவும் கனதியாக இருந்தது போல உணர்ந்ததால், போர்வைக்குள் இருந்து வெளியே வருவது  சிரமமானதாக இருந்தது. அவளுடைய… Continue reading அச்சக் கதறல் – க்ளோடியா சலஸார் ஹிமெனெஸ் (Claudia Salazar Jiménez)