‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைகள் தொகுப்பு – நூல் மதிப்பீடு : லக்ஷ்மி

புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண் சிந்தனைகளின் பரிமாணம்  சிறுகதைகள் பற்றிய பார்வைக்கு முன்… பெரும்பாலான தமிழ் பேசும் பெண்களின் புலம்பெயர் நாடுகளிற்கான பிரவேசம் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்களைப்போல் சுயமானதல்ல. ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணிடம் (அது சகோதரனிடமோ, தந்தையிடமோ, கணவனிடமோ, காதலனிடமோ, திருமண பந்தத்தால் இணையப் போகிறவனிடமோ) தான் வந்து சேர்கிறாள். இப்படியான இடப்பெயர்வின்போது பெண்கள் பௌதீக ரீதியாக இடம் மாற்றப்படுகிறார்கள். உடனடியாக அவர்கள் மாற்றுச் சூழலுடன் தம்மை இணைத்துக் கொள்வதற்கான வாசல்கள் பெரும்பாலாக… Continue reading ‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைகள் தொகுப்பு – நூல் மதிப்பீடு : லக்ஷ்மி

Khady Mutilée ‘காடி’ எனும் உருச்சிதைக்கப்பட்ட பெண் – லக்ஷ்மி

Khady Mutileé என்கின்ற இந்தப் புத்தகத்தை வாங்கியதும் வாசிக்கத் தொடங்கவில்லை. வழக்கம் போலவே சிறிது காலதாமதமாகவே அதனைச் சாத்தியப்படுத்த முடிந்தது. சில புத்தகங்கள் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடியவையாக இருக்கும். சில அந்தக் கணத்திலான மனநிலைக்கு உகந்ததாக இருப்பதில்லை. சில ஏற்கனவே எங்கோ படித்த ஒன்றைத் திரும்பவும் இன்னொரு வடிவத்தில் சொல்வது போன்றிருக்கும். இன்னும் சில, இதுவரை சிந்திக்கத் தோன்றியிராத ஒரு கோணத்தைக் காட்டித் தரும். சில தூக்கத்தைத் தொலைக்கும். இப்படி எத்தனையோ விதமான அனுபவங்களை… Continue reading Khady Mutilée ‘காடி’ எனும் உருச்சிதைக்கப்பட்ட பெண் – லக்ஷ்மி

அம்மாவிற்கு ஒரு கடிதம் – லக்ஷ்மி

அம்மா இப்போது இல்லை.  நீங்கள் இனி இல்லை என்ற செய்தி எனக்கு கிடைக்கும்போது அது ஒன்றும் ஆச்சரியமான செய்தியாக இருக்கவில்லை. உங்கள் மகன் உங்களை விரைவில் கூப்பிட்டு விடுவான் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். எனக்கு வந்த கவலை உங்களை அடிக்கடி வந்து பார்க்காமல் இருந்ததால் வந்ததுதான். ஆனால் நான் ஏன் உங்களைப் பார்க்க வரவில்லை. நீங்கள் நினைத்துக் கொண்டிருந்திருப்பீர்கள் உங்கள் செல்வம் சென்றதும் நான் உங்களை மறந்து விட்டேன் என்றுதான். பல உறவுகள் தொடர்புகளினால் மட்டும்… Continue reading அம்மாவிற்கு ஒரு கடிதம் – லக்ஷ்மி