‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைகள் தொகுப்பு – நூல் மதிப்பீடு : லக்ஷ்மி

புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண் சிந்தனைகளின் பரிமாணம்  சிறுகதைகள் பற்றிய பார்வைக்கு முன்… பெரும்பாலான தமிழ் பேசும் பெண்களின் புலம்பெயர் நாடுகளிற்கான பிரவேசம் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்களைப்போல் சுயமானதல்ல. ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணிடம் (அது சகோதரனிடமோ, தந்தையிடமோ, கணவனிடமோ, காதலனிடமோ, திருமண பந்தத்தால் இணையப் போகிறவனிடமோ) தான் வந்து சேர்கிறாள். இப்படியான இடப்பெயர்வின்போது பெண்கள் பௌதீக ரீதியாக இடம் மாற்றப்படுகிறார்கள். உடனடியாக அவர்கள் மாற்றுச் சூழலுடன் தம்மை இணைத்துக் கொள்வதற்கான வாசல்கள் பெரும்பாலாக… Continue reading ‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைகள் தொகுப்பு – நூல் மதிப்பீடு : லக்ஷ்மி

Khady Mutilée ‘காடி’ எனும் உருச்சிதைக்கப்பட்ட பெண் – லக்ஷ்மி

Khady Mutileé என்கின்ற இந்தப் புத்தகத்தை வாங்கியதும் வாசிக்கத் தொடங்கவில்லை. வழக்கம் போலவே சிறிது காலதாமதமாகவே அதனைச் சாத்தியப்படுத்த முடிந்தது. சில புத்தகங்கள் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடியவையாக இருக்கும். சில அந்தக் கணத்திலான மனநிலைக்கு உகந்ததாக இருப்பதில்லை. சில ஏற்கனவே எங்கோ படித்த ஒன்றைத் திரும்பவும் இன்னொரு வடிவத்தில் சொல்வது போன்றிருக்கும். இன்னும் சில, இதுவரை சிந்திக்கத் தோன்றியிராத ஒரு கோணத்தைக் காட்டித் தரும். சில தூக்கத்தைத் தொலைக்கும். இப்படி எத்தனையோ விதமான அனுபவங்களை… Continue reading Khady Mutilée ‘காடி’ எனும் உருச்சிதைக்கப்பட்ட பெண் – லக்ஷ்மி

“ஒருத்தி பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக ஆக்கப்படுகின்றாள்” – சிமோன் தி போவுவா

Le Deuxième Sexe (1949) - Simone De Beauvoir மொழியாக்கம்: லக்ஷ்மி  “இரண்டாவது பால்” இன்னும் தனது வலிமையை இழக்கவில்லை. சிமோன் தி போவுவாவின் கலங்கரை விளக்கம் என்று சொல்லக்கூடிய “இரண்டாவது பால்” என்னும் நூலுக்கு 1999ம் ஆண்டு ஜனவரியுடன் ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. யார் இந்த  சிமோன் தி போவுவா?  பெண்நிலைவாத இயக்கத்தில் பிரான்சில் மிக முக்கிய பங்கு வகித்த ஒருவர். எழுத்தாளர். அறிவுஜீவி. இவர் 1908ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம்… Continue reading “ஒருத்தி பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக ஆக்கப்படுகின்றாள்” – சிமோன் தி போவுவா

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து தொடருகின்ற ஆதிக்கவாதக் காய்ச்சல் – உபாலி கூரே

இக் கட்டுரை DPS Jeyaraj இன் வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்டது.  (http://dbsjeyaraj.com) மூல மொழி : ஆங்கிலம்  தமிழில் : லக்ஷ்மி  விடுதலைப்புலிகளை இலங்கையின் ஆயுதப்படைகள் இராணுவ ரீதியாக வெற்றி கொண்டதன் பின்னர் அங்கு தொடருகின்ற வெற்றி விழாக் கொண்டாட்டங்களின் எழுச்சியின் அபாயம் குறித்து ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் எச்சரித்திருக்கிறார். பயங்கரவாதம் என்று எதனை மக்கள் கிரகித்துக் கொண்டு அதனைப் பொறுத்துக் கொண்டிருந்தார்களோ, அச் செயல்கள் நிறைவு பெற்றதனால் அடைந்த நிம்மதியின் வெளிப்பாடாக, “பயங்கரவாதத்தின்… Continue reading விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து தொடருகின்ற ஆதிக்கவாதக் காய்ச்சல் – உபாலி கூரே