யார் இந்த சிந்துக்கரையாள்…

நாகலக்ஷ்மி சிவசம்பு என்ற உத்தியோகபூர்வ பெயர் கொண்ட நான் லக்ஷ்மி என்ற பெயரில் உங்களுக்கு அறிமுகமானாலும், எண்பதுகளில் தொடங்கி சஞ்சிகைகளிலும், இணைய இதழ்களிலும் வெளியாகிய எனது  மொழிபெயர்ப்புகள் மற்றும் பதிவுகளை தேடிச் சேகரிக்க வெளிக்கிட்ட பொழுதுதான் எனக்கே ஆச்சரியம்  எத்தனை புனைபெயர்களை பாவித்திருக்கிறேன் என்று. அவையாவன: குயிலி, அஜாதிகா, நிஷாந்தி, மானசி, மாளவிகா, கிரிந்தி மணி, சிந்துக்கரையாள், ஆதிரை, அநாமிகா. நாம் எமது பெயரை காவித் திரிய முக்கியத்துவம் கொடுக்காததும், எழுத்துக்காக அச்சுறுத்தப்பட்டதுமான காலமது. 

தொகுத்தவற்றை ஒரு இணையத் தளத்தில் சேர்த்து வைக்கலாம் என்று நினைத்ததை, செயல் வடிவமாக்கத் தொடங்கி இருக்கிறேன். ஆரம்பத்தில் சில பதிவுகளுடன் தொடங்கி படிப்படியாக ஏனையவற்றை சேர்த்துக் கொள்வேன். இனிமேல் செய்ய இருக்கின்றவற்றையும் இங்கே வெளியிடுவேன்.
மொழிபெயர்ப்புகளின் மூல மொழிகள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு. இத்தளத்திற்கு எனது புனைபெயர்களில் ஒன்றான ‘சிந்துக்கரையாள்’ என்ற பெயரைச் சூட்டி இருக்கிறேன்.

nluxmy@gmail.com