கடைசிப் புகலி : தாஹர் பென் ஜெல்லோன்

(Le dernier immigré: Tahar Ben Jelloun) மூலம்: பிரெஞ்சு  தமிழில்: லக்ஷ்மி  கடைசி அராபியப் புகலி, ஒரு வட ஆபிரிக்கன், இன்று பிரெஞ்சு மண்ணை விட்டுப் புறப்பட்டான்.  பிரான்ஸ் நாட்டின் சார்பாக முதலமைச்சரும் உள்நாட்டமைச்சரும் மொகமட் லெமிகிரிக்கு நன்றியறிதலைத் தெரிவித்து, உத்தியோகபூர்வமாக வழியனுப்புவதற்கு, வருகை தந்திருந்தார்கள். மொகமட் உணர்ச்சிவசப்படவோ, ஆத்திரப்படவோ இல்லை. அவன் தனது சொந்த நாட்டுக்கு என்றைக்குமாக மீளத் திரும்பிச் செல்வது குறித்த  மகிழ்ச்சியில் இருந்தான். அவனுக்கு அன்பளிப்பாக கம்பளியிலான ஒரு ஒட்டகப் பொம்மையும்… Continue reading கடைசிப் புகலி : தாஹர் பென் ஜெல்லோன்

‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைகள் தொகுப்பு – நூல் மதிப்பீடு : லக்ஷ்மி

புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண் சிந்தனைகளின் பரிமாணம்  சிறுகதைகள் பற்றிய பார்வைக்கு முன்… பெரும்பாலான தமிழ் பேசும் பெண்களின் புலம்பெயர் நாடுகளிற்கான பிரவேசம் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்களைப்போல் சுயமானதல்ல. ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணிடம் (அது சகோதரனிடமோ, தந்தையிடமோ, கணவனிடமோ, காதலனிடமோ, திருமண பந்தத்தால் இணையப் போகிறவனிடமோ) தான் வந்து சேர்கிறாள். இப்படியான இடப்பெயர்வின்போது பெண்கள் பௌதீக ரீதியாக இடம் மாற்றப்படுகிறார்கள். உடனடியாக அவர்கள் மாற்றுச் சூழலுடன் தம்மை இணைத்துக் கொள்வதற்கான வாசல்கள் பெரும்பாலாக… Continue reading ‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைகள் தொகுப்பு – நூல் மதிப்பீடு : லக்ஷ்மி

அச்சக் கதறல் – க்ளோடியா சலஸார் ஹிமெனெஸ் (Claudia Salazar Jiménez)

மொழியாக்கம்: லக்ஷ்மிமூலம்: ஆங்கிலம் “நரகம் என்பது தனக்கென எந்த விதமான எல்லைகளையோ அன்றி ஒரு தனி இடத்தையோ  வகுத்துக்கொண்ட ஒன்றல்ல. நாங்கள் எங்கிருக்கிறோமோ அது நரகம். நரகம் எங்கிருக்கிறதோ அங்கு நாங்கள் என்றும் இருந்தாக வேண்டும்.”  கிறிஸ்தோபர் மர்லோ - டாக்டர் ஃபௌஸ்டஸ் (Christopher Marlowe - Doctor Faustus) காலைப்பொழுது.  கட்டிலில் படுத்திருக்கும் அவளுக்கு, தனது உடல் வழமையை விடவும் கனதியாக இருந்தது போல உணர்ந்ததால், போர்வைக்குள் இருந்து வெளியே வருவது  சிரமமானதாக இருந்தது. அவளுடைய… Continue reading அச்சக் கதறல் – க்ளோடியா சலஸார் ஹிமெனெஸ் (Claudia Salazar Jiménez)

Khady Mutilée ‘காடி’ எனும் உருச்சிதைக்கப்பட்ட பெண் – லக்ஷ்மி

Khady Mutileé என்கின்ற இந்தப் புத்தகத்தை வாங்கியதும் வாசிக்கத் தொடங்கவில்லை. வழக்கம் போலவே சிறிது காலதாமதமாகவே அதனைச் சாத்தியப்படுத்த முடிந்தது. சில புத்தகங்கள் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடியவையாக இருக்கும். சில அந்தக் கணத்திலான மனநிலைக்கு உகந்ததாக இருப்பதில்லை. சில ஏற்கனவே எங்கோ படித்த ஒன்றைத் திரும்பவும் இன்னொரு வடிவத்தில் சொல்வது போன்றிருக்கும். இன்னும் சில, இதுவரை சிந்திக்கத் தோன்றியிராத ஒரு கோணத்தைக் காட்டித் தரும். சில தூக்கத்தைத் தொலைக்கும். இப்படி எத்தனையோ விதமான அனுபவங்களை… Continue reading Khady Mutilée ‘காடி’ எனும் உருச்சிதைக்கப்பட்ட பெண் – லக்ஷ்மி

தக்காளி – ஸஷாரி கரபாஷ்லிவ் (Zachary Karabashliev)

மொழியாக்கம்: லக்ஷ்மிமூலம்: ஆங்கிலம் (இந்த சிறுகதை, இன்னொரு நாட்டில் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கும்  வாழ்க்கைத் துணையை இழந்த ஒருவனின் அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் காலக்கிரம தொகுப்பு)  யூன் 11, 2010 எனது பெயர் கிறிஸ்டோ கிறிஸ்டோவ் கிறிஸ்டோவ். நான் இங்கு என் மகளைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். அதாவது என் மகளையும் மருமகனையும். ராடோஸ்லாவா - அது அவளுடைய பெயர், அவனுடையதல்ல. அவர்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வசிக்கிறார்கள். இந்த வசந்த காலத்தில் அவர்கள் எனக்கு விசா (அயல்… Continue reading தக்காளி – ஸஷாரி கரபாஷ்லிவ் (Zachary Karabashliev)

“ஒருத்தி பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக ஆக்கப்படுகின்றாள்” – சிமோன் தி போவுவா

Le Deuxième Sexe (1949) - Simone De Beauvoir மொழியாக்கம்: லக்ஷ்மி  “இரண்டாவது பால்” இன்னும் தனது வலிமையை இழக்கவில்லை. சிமோன் தி போவுவாவின் கலங்கரை விளக்கம் என்று சொல்லக்கூடிய “இரண்டாவது பால்” என்னும் நூலுக்கு 1999ம் ஆண்டு ஜனவரியுடன் ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. யார் இந்த  சிமோன் தி போவுவா?  பெண்நிலைவாத இயக்கத்தில் பிரான்சில் மிக முக்கிய பங்கு வகித்த ஒருவர். எழுத்தாளர். அறிவுஜீவி. இவர் 1908ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம்… Continue reading “ஒருத்தி பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக ஆக்கப்படுகின்றாள்” – சிமோன் தி போவுவா

பெண்களின் தைரியமான ஒளிவு மறைவற்ற எதிர்ப்புக்குரல் – அல்கெடெய்ரி, அல்முஃப்தி

மூல மொழி: ஆங்கிலம்  தமிழில் : லக்ஷ்மி  மத்திய கிழக்கின் பெண்கள் கற்கைநெறி விமர்சனச் சஞ்சிகையில் 2004ம் ஆண்டில் வெளியாகிய ஒரு நேர்காணலின் தமிழாக்கம். காலம்: 2004ம் ஆண்டு பேசுபவர்கள்: அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஈராக் நாட்டைச் சேர்ந்த பெண்கள் இவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களின் முன்பு தங்கள் நிலை பற்றிக் கூறி, தங்களுக்கு நடக்கும் அநீதி குறித்து கேள்வி எழுப்புமாறு அவர்களிடம் வேண்டுதல் விடுக்கிறார்கள்.  ஒவ்வொரு தடவையும் அவர்களுடைய கேள்விகள் வெறுமனே அமெரிக்க… Continue reading பெண்களின் தைரியமான ஒளிவு மறைவற்ற எதிர்ப்புக்குரல் – அல்கெடெய்ரி, அல்முஃப்தி

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து தொடருகின்ற ஆதிக்கவாதக் காய்ச்சல் – உபாலி கூரே

இக் கட்டுரை DPS Jeyaraj இன் வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்டது.  (http://dbsjeyaraj.com) மூல மொழி : ஆங்கிலம்  தமிழில் : லக்ஷ்மி  விடுதலைப்புலிகளை இலங்கையின் ஆயுதப்படைகள் இராணுவ ரீதியாக வெற்றி கொண்டதன் பின்னர் அங்கு தொடருகின்ற வெற்றி விழாக் கொண்டாட்டங்களின் எழுச்சியின் அபாயம் குறித்து ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் எச்சரித்திருக்கிறார். பயங்கரவாதம் என்று எதனை மக்கள் கிரகித்துக் கொண்டு அதனைப் பொறுத்துக் கொண்டிருந்தார்களோ, அச் செயல்கள் நிறைவு பெற்றதனால் அடைந்த நிம்மதியின் வெளிப்பாடாக, “பயங்கரவாதத்தின்… Continue reading விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து தொடருகின்ற ஆதிக்கவாதக் காய்ச்சல் – உபாலி கூரே

அம்மாவிற்கு ஒரு கடிதம் – லக்ஷ்மி

அம்மா இப்போது இல்லை.  நீங்கள் இனி இல்லை என்ற செய்தி எனக்கு கிடைக்கும்போது அது ஒன்றும் ஆச்சரியமான செய்தியாக இருக்கவில்லை. உங்கள் மகன் உங்களை விரைவில் கூப்பிட்டு விடுவான் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். எனக்கு வந்த கவலை உங்களை அடிக்கடி வந்து பார்க்காமல் இருந்ததால் வந்ததுதான். ஆனால் நான் ஏன் உங்களைப் பார்க்க வரவில்லை. நீங்கள் நினைத்துக் கொண்டிருந்திருப்பீர்கள் உங்கள் செல்வம் சென்றதும் நான் உங்களை மறந்து விட்டேன் என்றுதான். பல உறவுகள் தொடர்புகளினால் மட்டும்… Continue reading அம்மாவிற்கு ஒரு கடிதம் – லக்ஷ்மி